திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முனியாண்டி. இவருக்கு ஆதரவாக பனையூரில் வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் மற்றும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தனர். அப்போது பேசிய அவர் ஸ்டாலின் தவறான தகவலை பரப்பி வருவதாக தெரிவித்தார்.மேலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை குறை சொல்ல எதிர்க்கட்சியினருக்கு எந்த தகுதியும் இல்லை எனவும், இந்த தொகுதியில் நடைபெறும் தேர்தலில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
Discussion about this post