மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்ததை அடுத்து நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள குமாரபாளையம் காவிரிக் கரையோரத்தில் உள்ள இந்திரா நகர், மணிமேகலை வீதி, அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்டோரை மாவட்ட நிர்வாகத்தினர் மீட்டு அப்பகுதியிலுள்ள தனியார் மண்டபங்கள் மற்றும் பள்ளிகள் என பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி நேரில் சந்தித்து இலவச வேட்டி, சேலை, பாய், தலையணை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். வீடுகளில் வெள்ளம் வடியும் வரை உணவு, மருத்து வசதி,என அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்க உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்களிடம் அமைச்சர் தங்கமணி உறுதியளித்தார்.
Discussion about this post