நாமக்கல்லில் மூன்று நாள் ஐயப்பன் ரதயாத்திரை ஊர்வலத்தை அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்ட சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் நேற்று தொடங்கிய ஐயப்பன் ரதயாத்திரை நாமக்கல் மாவட்டம் முழுவதும், வரும் 12 ம் தேதி வரை சுமார் 120 கிராமங்களுக்கு செல்ல உள்ளது. அதன்படி நாமக்கல் நகரம் மோகனூர் சாலையில் உள்ள ஐயப்பன் கோவில் முன்பு ரதயாத்திரை ஊர்வலம் தொடங்கியது. இந்த ரதயாத்திரையை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, அகில இந்திய துறவிகள் சங்க துணைத்தலைவர் ராமானந்த மஹராஜ் சுவாமிகள் ஆகியோர் துவக்கி வைத்தனர். கேரளாவின் சபரிமலை கருவறையிலிருந்து ஏற்றப்பட்ட தீபம் அணையா தீபமாக யாத்திரையில் இருப்பதால், ரதயாத்திரையை பார்த்து வழிபடும் பக்தர்கள், அதிலிருந்து தீபம் ஏற்றி வீடுகளுக்கு கொண்டு சென்று வழிபடுகின்றனர்.
Discussion about this post