உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அமமுகவின் 4 பெண் வேட்பாளர்கள் உட்பட, 7 வேட்பாளர்கள் அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் அமமுக சார்பில் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட உள்ள 4 பெண்கள் உட்பட 7 வேட்பாளர்கள், தேர்தல் நடைபெற 2 நாட்கள் உள்ள நிலையில், அதிமுகவில் இணைந்தனர். மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி முன்னிலையில், அமமுகவைச் சேர்ந்த ஒன்றிய துணை செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் 12 பேர், அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களை அமைச்சர் வரவேற்றார்.
Discussion about this post