தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அடுத்த தென்னம்பட்டியில் 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.
தென்னம்பட்டி பகுதியில் காற்று மற்றும் சூரிய ஒளியின் மூலம் பெறப்படும் மரபுசாரா மின்சக்தி என, தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு கொண்டு சென்று உபயோகப்படுத்தும் விதமாக, தனி பசுமை மின்வழித்தடம் ஜெர்மனி நாட்டின் நிதி உதவியுடன், பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் 315 எம் வி ஏ திறனுள்ள மின் மாற்றி இரண்டும், 200 எம் வி ஏ திறனுள்ள மின் மாற்றி இரண்டும் பொறுத்தப்பட்டுள்ளன.
Discussion about this post