நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் வரும் 17 மற்றும் 30-ம் தேதிகளில், இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி வருகை புரிந்தார்.
அவருக்கு அதிமுக நிர்வாகிகள் சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதன் பின், அமைச்சர் தங்கமணி திறந்த வேனில், அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்ததற்கு யார் காரணம் என மக்கள் அறிவார்கள் என்றும், இந்த தேர்தலில் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்தார்.
Discussion about this post