நாமக்கல் மாவட்டத்தில், மர்ம நபர்களால் தாக்கப்பட்ட அதிமுக வேட்பாளரை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேரில் சந்தித்து, உடல்நலம் குறித்து விசாரித்தார்..
நாமக்கல் மாவட்டம், கூலிப்பட்டியை சேர்ந்த லோகநாதன் அதிமுக சார்பில் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் நேற்றிரவு தனது இருசக்கர வாகனத்தில், கூலிப்பட்டிக்குச் சென்ற லோகநாதனை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். இதில் முகம் மற்றும் காலில் பலத்த காயம் அடைந்த லோகநாதன், நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து நலம் விசாரித்தார். மேலும் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர் ஆகியோரும் அமைச்சர் தங்கமணியுடன் சென்று லோகநாதனிடம் உடல்நலம் விசாரித்தனர். அதிமுக வேட்பாளர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post