கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களைச் சீரமைக்கும் பணியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடக்கி வைத்தார்.
கோவையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குளங்களைத் தூர்வாரிச் சீரமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. 21ஆவது வார்டில் உள்ள செல்வம்பதி குமாரசாமி குளம் 31 கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்பில் தூர்வாரப்படவுள்ளது. இதற்கான பூமி பூஜையில் அமைச்சர் வேலுமணி கலந்து கொண்டு சீரமைக்கும் பணியினைத் தொடக்கி வைத்தார். இதேபோல், கிருஷ்ணம்பதி, வாலாங்குளம், சிங்காநல்லூர் ஆகிய குளங்களைச் சீரமைக்கும் பணியினையும் பூமி பூஜை செய்து அமைச்சர் வேலுமணி தொடக்கி வைத்தார்.
Discussion about this post