திமுக, ஆட்சியில் இருந்த போது, மக்களுக்கு தேவையான எவ்வித திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கிராமம், கிராமமாக திறந்த வேனில் சென்ற அமைச்சர் வேலுமணி, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அதிமுக ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த நல்ல திட்டங்களை எடுத்துரைத்து பேசிய அமைச்சர், எதிர் கட்சியினருக்கு, வாக்காளர்கள் செலுத்தும் வாக்கு செல்லாத வாக்கிற்கு சமம் எனத் தெரிவித்தார்.
இந்த பிரசாரத்தின் போது, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Discussion about this post