கோவை எட்டிமடையில் நடைபெற்ற கால்நடைத் திருவிழாவில், சிறப்பு விருந்தினராக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துக் கொண்டார்.
கோவை மதுக்கரையை அடுத்த எட்டிமடை பகுதியில் உள்ள எல்லை மாகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு யாகம் நடைபெற்றது. உலக அமைதி மற்றும் மழைப் பொழிவு வேண்டி நடத்தப்பட்ட மகா யாகத்தில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
விழாவின் ஒரு பகுதியாக, கோயில் வளாகத்தில், கால்நடைத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. எட்டிமடை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட நாட்டு மாடுகள், காங்கேயம் காளைகள், குதிரைகள், சேவல் வகைகள், இத்திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டன. கால்நடை திருவிழாவை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டுச் சென்றனர்.
விழாவில், சிறந்த மாடு, குதிரை, நாய், சேவல் என போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும், சிறப்பு யாகம் மற்றும் கால்நடைத் திருவிழாவிற்கு வந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Discussion about this post