ஆனைமலை, நல்லாறு திட்டம் நிச்சயம் கொண்டு வரப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் முதலமைச்சரின் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். பின்னர் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழகம் முழுவதும் கூடுதலாக 49 ஆயிரம் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 80 சதவீதம் விபத்துக்கள் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஆனைமலை, நல்லாறு திட்டம் விரைவில் கொண்டுவரப்படும் எனவும் கூறினார்.
Discussion about this post