திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த செய்யாறில் ஆரணி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செஞ்சி ஏழுமலையை ஆதரித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். பொதுமக்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக வேட்பாளர் ஆதி பராசக்தி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார்.
Discussion about this post