ராணுவ வீரர்கள் எல்லைகளை காப்பது போல், காவல்துறையினர் கொரோனாவிலிருந்து பொதுமக்களை காக்க தீவிரமாக செயல்பட்டு வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், புறநகர் பகுதிகளில் நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர், நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். எல்லைகளில் போராடும் ராணுவ வீரர்கள் போல், காவல்துறையினர் ஊரடங்கு அமல்படுத்துவதில் தன்னலம் பார்க்காமல் பணியாற்றி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் வினய், காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், மாநாகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
Discussion about this post