விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் தமிழக அரசின் சார்பில் 500க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுமார் 1.60 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர், ஸ்ரீ வில்லிபுத்தூர் மற்றும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் ராஜபாளையத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதை சுட்டிக் காட்டினார். மேலும் இராஜபாளையத்தில் உள்ள ஊரணிகள் மற்றும் கண்மாய்கள் அரசின் சார்பில் விரைவில் தூர் வாரப்படும் எனவும் தெரிவித்தார்.
Discussion about this post