தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் அக்டோபர் 21 ஆம் நடத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகள், வரும் 24-ம் தேதி எண்ணப்படுகிறது. அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ்செல்வனும், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி நாராயணனும் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், ஷங்கர் இயக்கத்தில் “முதல்வன்” படத்தில் நடித்த அர்ஜூன், ஒருநாள் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அப்போது, பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது நேரடியாக தலையிட்டு உடனடியாக தீர்வு காணுவார். இதேபோல் தான், நாங்குநேரி தொகுதியில் வாக்குச் சேகரிக்க சென்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம், எங்கள் ஊருக்கு பேருந்து பற்றாக்குறை இருப்பதாக பெண் புகார் அளித்துள்ளார்.
இதனைக் கேட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, உடனடியாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரை செல்போனில் தொடர்புக் கொண்டு, நடந்த விவரத்தை தெரியப்படுத்தியதை அடுத்து, புகார் அளித்த பெண்ணையே அழைத்து அமைச்சரிடம் பேசவைத்துள்ளார். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Discussion about this post