டெல்லியில் நடைபெற்ற ஜல்ஜீவன் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருவது குறித்து எடுத்துரைத்தார்.
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்த அவர், ஆயிரத்து 196 கோடி ரூபாய் செயலாக்க மானியம் மற்றும் 3 ஆயிரத்து 780 கோடி ரூபாய் அடிப்படை மானியம் உள்ளிட்ட தொகையை விடுவிக்கக் கோரும் முதலமைச்சரின் கடிதத்தை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, மத்திய ஜல்சக்தித் துறையின் ஜல்ஜீவன் மாநாட்டில் கலந்து கொண்ட அமைசர் எஸ்.பி. வேலுமணி, தமிழக அரசு செயல்படுத்தி வரும் நீர்பாதுகாப்பு திட்டங்கள் குறித்து விளக்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதை மாநாட்டில் எடுத்துரைத்ததாக கூறினார். இதன்மூலம், அதிகளவில் தண்ணீரைத் சேமிக்கும் நிலை உருவாக இருப்பதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
Discussion about this post