பள்ளிக்கல்வித்துறையில் இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்க்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அடுத்த கவுந்தபாடியில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் கருப்பணன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். அப்போது மாணவர்களிடையே பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்றும், பள்ளிக்கல்வித்துறையில் இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்க்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். மாணவ மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், படித்து முடிக்கும் வரை செல்போன் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
Discussion about this post