ஈரோடு, செந்தாம்பாளையத்தில் உள்ள காந்தி கோவிலுக்கு சென்ற சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டார்.
தமிழகத்திலேயே காந்திக்கு முதன் முதலாக கட்டப்பட்ட கோவிலான மகாத்மா காந்தி கோவிலில், அவரின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காந்தி கோவிலை அரசே ஏற்று நடத்துவது குறித்து, முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் ஆட்சி மொழியாக தமிழை கொண்டுவருமாறு ஸ்டாலின் கோரிக்கை வைப்பதற்கு முன்னரே, மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர், மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என தெரிவித்தார்.
Discussion about this post