ஒரு மையத்தில் நடந்த முறைகேட்டை வைத்துக் கொண்டு, குரூப்-4 தேர்வை ரத்து செய்ய சொல்வது நியாமாக இருக்காது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
குரூப்-4 முறைகேடு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் டிஎன்பிஎஸ்சி நிர்வாகிகள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளருடன் அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.