திமுக தேர்தல் அறிக்கை அரைவேக்காடு தனமாக உள்ளது

மக்களவை தேர்தலையொட்டி, தி.மு.க. தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியட்டார். அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலங்களிலும், தமிழிலேயே செயல்படதக்க வகையில் இணை ஆட்சி மொழியாக தமிழை அங்கீகரிக்க தேவையான திருத்தங்கள் செய்யப்படும் உள்ளிட்ட அறிக்கையில் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கை அரைவேக்காடு தனமாக இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவின் தேர்தல் அறிக்கையால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும், அதிமுகவின் தேர்தல் அறிக்கைதான் உண்மையாக ஹீரோ, ஹீரோயின் என்று குறிப்பிட்டார்.

இதேபோல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொய்யான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருப்பதாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்று கூறினார்.

Exit mobile version