சென்னை குடிநீர் வாரியம் சார்பில், பொது மக்களுக்கு லாரியில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதை, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பிறகு சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தண்ணீர் விநியோகம் செய்வதற்கு கால தாமதம் ஏற்பட்ட நிலையில், அதனை போக்கும் வகையில் தற்போது ஒவ்வொரு லாரிகளிலும் 4-க்கும் மேற்பட்ட குழாய்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறினார்.
இதனை தொடர்ந்து, 2018-19ம் கல்வியாண்டில் அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்று சிங்கப்பூருக்கு கல்விச் சுற்றுலா சென்று, நேற்று தாயகம் திரும்பிய பள்ளி மாணவ, மாணவிகளை, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வரவேற்று வாழ்த்தினர். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.
Discussion about this post