24 துணை ஆட்சியர் பணியிடங்களுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கு, பணி நியமன ஆணைகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.
டி.என்.பி.எஸ்.சி. மூலம் தமிழகம் முழுவதும் 28 துணை ஆட்சியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 24 துணை ஆட்சியர்கள் பணி நியமன ஆணைகளை அமைச்சரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.
கூடுதல் தலைமைச் செயலாளர் சத்தியகோபால், வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்ள உயரதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Discussion about this post