அரசு சட்டக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகளை, சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் வழங்கினார்.
தமிழ்நாடு சட்டக்கல்விப் பணி மற்றும் அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்த உதவி பேராசிரியர்களை தேர்வு செய்ய, ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவும், ஆசிரியர் தேர்வு வாரியமும் இணைந்து உதவி பேராசிரியர்களை தேர்வு செய்தனர்.
தேர்வு செய்யப்பட்ட 186 உதவி பேராசரியர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்படவுள்ளது. இதன் அடையாளமாக, 5 பேருக்கான பணி நியமன ஆணையை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், சட்டக் கல்வி இயக்குனர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.