விழுப்புரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: அமைச்சர் சி.வி. சண்முகம் துவக்கி வைத்தார்

விழுப்புரத்தில் நகராட்சி சார்பில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் துவக்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நாளை முதல் அமலாகிறது. இந்தநிலையில் விழுப்புரம் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியை சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதையடுத்து நகராட்சித்துறை சார்பில் நடத்தப்பட்ட பிளாஸ்டிக் விழிப்புணர்வு கண்காட்சியையும் அவர் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் 60க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரிப்பது, பிளாஸ்டிக் மாற்று பொருட்களான வாழையிலை, பாக்கு மட்டை உள்ளிட்டவற்றை பயன்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இந்த கண்காட்சியில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சார்பில் மாட்ட அளவில் நடைபெற்றுவரும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர் சிறப்பு நோக்கு கூட்டத்திலும் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

Exit mobile version