விழுப்புரத்தில் மருத்துவ மாணவிக்கு சொந்த நிதியில் இருந்து 1 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்திய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் செயல் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரை சேர்ந்த கலைதேவி என்ற அரசுப் பள்ளி மாணவி 4வது முறையாக நீட் தேர்வு எழுதி 437 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். செங்கல்பட்டில் உள்ள கல்லூரியில், இவருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், அவர் ஏற்கெனவே படித்து வந்த நர்சிங் கல்லூரியில் இருந்து வெளியேற ஒரு லட்சம் ரூபாய் தேவைப்பட்டுள்ளது.
கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே சான்றிதழ்களை கொடுக்க முடியும் என கல்லூரி நிர்வாகம் வலியுறுத்திய நிலையில், தகவல் அறிந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மாணவியை நேரில் அழைத்து, ஒரு லட்சம் ரூபாயை உடனடியாக வழங்கினார். இந்த உதவியை என்றும் மறக்க மாட்டேன் என மாணவி கண்ணீர் மல்க கூறினார்.
தக்க தருணத்தில் உதவிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு மாணவியும், அவரது குடும்பத்தாரும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
Discussion about this post