விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க வேட்பாளரை ஆதரித்து, அமைச்சர் சி.வி.சண்முகம் தீவிர பிரசாரம் செய்தார்.
கோலியனூர், கண்டமங்கலம் ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட, வளவனூர், பூதூர், சிறுவந்தாடு, எல்.ஆர்.பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் வீதி வீதியாக சென்று, விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி, அதிமுக கூட்டணியின் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது ஏராளமான பெண்கள், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள், ஆராத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Discussion about this post