கன்னியாகுமரி மாவட்டத்தில் தாறுமாறாக ஓடிய மினி பேருந்து ஒன்று, சாலையில் நடந்து சென்ற மாணவிகள் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பலரது மனதை பதற வைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள பழைய பாலம் கல்லூரி சாலையில், மாணவிகள் கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது குழித்துறை மேல்புறம் வழியாக செல்ல வேண்டிய தனியார் மினி பேருந்து ஒன்று, தடம் மாறி கல்லூரி சாலையில் அதிவேகமாக தாறு மாறாக ஓடியது. அப்போது, சாலை ஓரமாக நடந்து சென்ற மாணவிகள் மற்றும் ஆட்டோ மீது மினி பேருந்து மோதியது. இதில் படுகாயமடைந்த 11 மாணவிகளுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு மாணவி மட்டும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில், கேரள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post