கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதால் லட்சக்கணக்கானோர் வேலை இலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. இதனால் அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. ஊரடங்கு காரணமாக கச்சா எண்ணெய்யின் தேவையும் குறைந்துள்ளதால், அதன் விலையும் சரிந்துள்ளது. இதையடுத்து அமெரிக்காவில் நேற்றைய நிலவரப்படி ஒரு பேரல் கச்சா எண்ணெய் 18 புள்ளி 27 டாலராக உள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டில் சுமார் 17 டாலருக்கு கச்சா எண்ணெய் பேரல் விற்கப்பட்டதே குறைந்த விலையாக இருந்தது. இந்த சரிவின் காரணமாக 140 எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் திவாலாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Discussion about this post