தமிழ்நாடு பால் முகவர்கள்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடிகர் சிம்பு மீது காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
சமீபத்தில் சமூக வளைதளங்களில் சிம்பு காணொலி ஒன்றை வெளியிட்டார். இது அவரது ரசிகர்களை தூண்டும்விதமாக இருப்பதாகவும், இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் பால் முகவர்கள் காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளனர். குறிப்பாக, அந்த காணொலியில் சிம்பு, தனது பட ரிலீஸின்போது ரசிகர்கள் பிரமாண்டமாக பாலபிஷேகம் செய்ய வேண்டும் எனவும், கட் அவுட்கள் பெரிய அளவில் இருக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இதனால் பால் முகவர்கள் சங்கத்தினர் காவல் ஆணையரிடம் நடிகர் சிம்பு நடித்து வெளிவர உள்ள “ வந்தா ராஜாவா தான் வருவேன்” பட ரிலீஸின் போது, கடைகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
Discussion about this post