தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை, காரைக்கால், நாகப்பட்டினம், வேலூர், விழுப்புரம், அரியலூர், ராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர், செஞ்சி பகுதியில் 11 சென்டி மீட்டர் மழையும், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் 10 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு திசையில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கவனமாக செல்ல வேண்டும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
Discussion about this post