வெப்ப சலனம் காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தின் ஒரிரு இடங்களில் லேசனாது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் . கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலாவியில் 6 செ.மீ மழையும், அவலாஞ்சி, கூடலூர் பஜாரில் -3செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
Discussion about this post