கொரோனா 2ஆம் அலை: செண்ட்ரலில் குவியும் வடமாநில தொழிலாளர்கள்

சொந்த ஊர் செல்வதற்காக நூற்றுக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருக்கின்றனர்.

5 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், ஒடிசா, மேற்குவங்காளம், அசாம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் கட்டுமான தொழிலிலும் பிறர் ஓட்டல்கள், மால்கள், தங்கும் விடுதிகள், அலங்கார வேலைகள், டெய்லரிங் என்று வட மாநில தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் பணுயாற்றி வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஊரடங்கின் போது இவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் பலரும் நடந்தே ஊர்களுக்கு சென்றனர்.இப்போது மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகமாகி் வருவதன் காரணமாக வட மாநில தொழிலாளர்கள் கலக்கம் அடைந்து கூட்டம் கூட்டமாக ஊருக்கு படையெடுக்கிறார்கள்.

குறிப்பாக சென்னை சென்ட்ரலில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களுக்காக ஏராளமானவர்கள் ரயில் நிலையங்களில் காத்து இருக்கிறார்கள். ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் உரிய சோதனைகளுக்கு பின் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Exit mobile version