மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை திரைப்படமாகிறது!

உலகத்தினர் அனைவராலும் கொண்டாடப்பட்ட பிரபல பாப் இசைப்பாடகர் மைக்கேல் ஜாக்சன் 2009 ஆம் ஆண்டில் இறந்தார். அவரது ரசிகர்களை இந்தச் செய்தி மிகவும் பாதித்திருந்தது. தற்போது அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வர இருக்கிறது.

இந்தத் திரைப்படத்திற்கு ‘மைக்கேல்’ என்றப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தில் மைக்கேல் ஜாக்சனின் சகோதரர் மகன் ஜாஃபர் ஜாக்சன் மைக்கேல் ஜாக்சனாக நடிக்க உள்ளார். இந்தத் திரைப்படத்தினை அன்டோயின் ஃபுகுவா இயக்குகிறார். மேலும் இத்திரைப்படத்தினை ஆஸ்கர் விருதுபெற்ற ‘பொஹிமியன் ராப்சோடி’ படத்தை தயாரித்த கிரஹாம் கிங் தயாரிக்கிறார்.

இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கூறும்போது, “2 வருடங்களுக்கு முன்பு ஜாஃபரை சந்தித்ததாகவும், மைக்கேல் ஜாக்சனின் ஆளுமையை இயல்பாக அவர் வெளிப்படுத்திய விதம் கண்டு தான் வியந்ததாகவும் தெரிவித்தார். மேலும் மைக்கேல் ஜாக்சனாக நடிப்பதற்கான நடிகரை, உலகம் முழுவதும் தேடிய பிறகு, அதற்கான சரியான நபர் ஜாஃபர் மட்டுமே என்பது தெளிவானது” என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version