ஐபிஎல் போட்டியின் 24-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி மும்பை அணி திரில் வெற்றி பெற்றது.
காயம் காரணமாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் அவருக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேன் பொலார்டு கேப்டனாக செயல்பட்டார். டாசில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீசத் தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் லோகேஷ் ராகுல் அதிகபட்சமாக 100 ரன்கள் அடித்தார்.
198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களான டி காக், சித்தேஷ் லாட் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சூர்யா குமார் யாதவும் 21 ரன்களுக்கு அவுட் ஆனார். இதையடுத்து களமிறங்கிய பொலார்டு அதிரடி காட்டினார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தாலும் மறுபுறம் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 10 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் என மைதானத்தின் நாலாபுறமும் பந்து வீச்சை சிதறடித்த பொலார்டு, 83 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அந்நேரம் வெற்றிக்கு 4 ரன்களே தேவைப்பட்ட நிலையில் அடுத்து வந்த ராகுல் சாஹர் -அல்சாரி நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றி பெற வைத்தனர்.
Discussion about this post