மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 32ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் நடைபெறும் உறுதியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அதிமுக தலைமைக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 32ஆம் ஆண்டு நினைவு நாள் வரும் 24ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
இதையடுத்து அன்று காலை 10.35 மணிக்கு மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், நிர்வாகிகள், அமைச்சர்கள் மரியாதை செலுத்தவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் நினைவிடத்தின் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
Discussion about this post