டாக்டர். எம்.ஜி. ஆர் மத்திய ரயில் நிலையம் என பெயர் பலகை அமைக்கும் பணிகள் தீவிரம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்ற பெயர் பலகைகள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.சென்னையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, தமிழக அரசும் ஏப்ரல் 5 ஆம் தேதி அதனை உறுதிசெய்யும் விதமாக அரசாணை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகைகளில் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது. டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று பெயரை மாற்றி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி ஓரிரு தினங்களில் நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version