மெக்சிகோவில் பேய்த் திருவிழாவை முன்னிட்டு ஏராளமானோர் பயங்கரமாகத் தோற்றமளிக்கும் பேய் முகமூடிகளுடன் ஊர்வலமாக வந்து பார்வையாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தினர்.
மெக்சிகோவில் ஆண்டுதோறும் அக்டோபர் 31 ஆம் தேதி இறந்தவர்களின் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி நடைபெறும் பேய்த் திருவிழாவில் நடனக் கலைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்றுத் திகிலூட்டும் வகையில் கோர முகங்களைக் கொண்ட முகமூடிகளை அணிந்து ஊர்வலமாகச் செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு ஒருவாரத்துக்கு முன்பாகவே பேய்த் திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது. ரத்தம் வடியும் கண்கள், கொம்பு முளைத்த தலை, வாய்க்கு வெளியே நீண்ட கோரப் பற்கள் ஆகிய தோற்றங்களைக் கொண்ட முகமூடிகளை அணிந்து கலைஞர்கள் ஊர்வலமாக வந்தது பார்வையாளர்களுக்கு அச்சத்தையும் புல்லரிப்பையும் ஏற்படுத்தியது.
Discussion about this post