ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நைனாமரைக்கான் கிராமத்தை சேர்ந்த விவசாயி, மெக்சிகன் புல் வளர்ப்பில் நல்ல பலனை அடைந்து வருகிறார்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நைனாமரைக்கான் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பாரதி. இவர் வறட்சியிலும் சிறப்பாக வளரும் 5 மாத பயிரான மெக்சிகன் புல் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். வீடுகள், வணிக நிறுவனங்களில் அலங்கார பொருளாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த புல்லை, 5 மாதங்களுக்கு ஒருமுறை அறுவடை செய்து பாரதி விற்பனை செய்து வருகிறார்.
இவரிடம் இந்த புல்லை வாங்கி செல்பவர்கள் நல்ல லாபத்திற்கு விற்று பயனடைகிறார்கள். இந்த மெக்சிகன் புல், விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை தருவதாகவும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வந்து தன்னிடம் வாங்கி செல்வதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.
Discussion about this post