மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 25 நாட்களுக்கு மேலாக அதன் முழு கொள்ளளவான 120 அடியில் நீடித்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததன் காரணமாக அணை, அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவை பொருத்து, அணைக்கு வரும் நீரின் அளவு ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும், அணையின் நீர் மட்டம், தொடர்ந்து 25 நாட்களுக்கு மேலாக அதன் முழு கொள்ளளவான 120 அடியில் நீடித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 3 நாட்களாக வினாடிக்கு 8 ஆயிரத்து 500 கனஅடியாக உள்ளது. நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சியாக உள்ளது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி நீரும் திறந்து விடப்படுகிறது.
Discussion about this post