8 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோயம்பேடு மெட்ரோ தலைமை அலுவலகத்தில், மெட்ரோ ரயில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மெட்ரோ ரயில் சேவை முடங்கி உள்ளது.
மெட்ரோ நிர்வாக நலனுக்கு எதிராக செயல்படுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக மெட்ரோ ரயில் ஊழியர்கள் 8 பேரை நிர்வாகம் பணி நீக்கம் செய்திருந்தது. பணியை விதிமுறைப்படி செய்யவில்லை, நிர்வாகத்திற்கு மிரட்டல், நிர்வாக நலனுக்கு எதிராக செயல்படுதல் உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக மெட்ரோ நிர்வாகம் கூறியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ரோ ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை மெட்ரோ ரயில் பணியாளர் சங்கம் உருவாக்கியதன் காரணமாகவும், தனியார் மயமாக்கலுக்கு எதிராக இருந்ததாலும் சங்க நிர்வாகிகள் அனைவரையும் நிர்வாகம் நீக்கியதாக ஊழியர்கள் கூறுகின்றனர். கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் மெட்ரோ ஊழியர்கள் குடும்பத்தினருடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Discussion about this post