மெட்ரோ ரயில் பணிக்காக வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடி சென்ற மூன்று பேரை மாதவரம் பால்பண்ணை போலீசார் கைது செய்தனர்.
மாதவரத்தில் மெட்ரோ ரயில் அமைப்பதற்காக ஆய்வு பணிகள் முடிந்து துளையிடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நீண்ட இரும்பு குழாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இரும்பு குழாய்கள் காணாததைக் கண்டு மெட்ரோ ரயில் பணியாளர்கள், மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கொடுங்கையூரைச் சேர்ந்த மணிகண்டன், வியாசர்பாடியைச் சேர்ந்த கலாநிதி, மற்றும் வேலு என்பவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருடிச் சென்ற, இரும்பு குழாய்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
Discussion about this post