கடந்த 3 நாள்களாக கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில், மெட்ரோ ரயில்களில் இன்றும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வண்ணாரப் பேட்டை – டி.எம்.எஸ் இடையே கடந்த ஞாயிறன்று புதிதாக மெட்ரோ ரயில் சேவை தொடக்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் ஆர்வத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதற்காக, இலவச பயணத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பால் மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில் 4ஆவது நாளாக இன்றும் இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது
Discussion about this post