பாலியல் புகார்களை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசியல், சினிமா, தொழில்துறை உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பெண்கள், தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை me too ஹாஷ்டேக் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த சர்ச்சையில் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தொலைக்காட்சி நடிகர்கள் என பலர் சிக்கியுள்ளனர். மத்திய வெளியுறவு இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் me too புகாரால் அமைச்சர் பதவியையே இழக்க நேர்ந்தது. இந்நிலையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாலியல் புகார்களை விசாரிக்க மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.
இக்குழுவில் அமைச்சர்கள் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், மேனகா காந்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்கவும் சட்ட வழிமுறைகளை எளிமையாக்கவும் இக்குழு ஆலோசனைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post