இன்று அதிகாலை அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ள ஃபானி புயல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னையில் இருந்து 575 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது நாளை மாலையில் ஒடிசா கடற்கரையை நோக்கிச் செல்லும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தென்மேற்கு வங்கக்கடல் உள்ளிட்ட பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தினார்.