ஜரோப்பா மற்றும் ஜப்பானுடைய இரு சாட்டிலைட்டுக்கள் புதன் கிரகத்தை நோக்கிய தமது பயணத்தை ஆரம்பித்துள்ளன. பெப்பிகொலம்போ” எனப்படும் புதன் மீதான இவ்விரு நாடுகளின் கூட்டுநடவடிக்கைக்காக தென் அமெரிக்காவிலிருந்து ஏரியேன் ராக்கெட்டின் உதவியுடன் விண்ணில் ஏவப்பட்டிருந்தது. ஏவப்பட்டுள்ள இவ்விரு சாட்டிலைட்டுக்களும் தமது இலக்கை அடைய கிட்டத்தட்ட 7 வருங்களாகும் எனத் தெரிவிக்கின்றனர். புதன் கிரகத்தின் புரியாத பல ரகசியங்களை இந்த சாட்டிலைட்டுக்கள் தெரிவிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ஜப்பான் மற்றும் ஜரோப்பா நாடுகள் புதனுக்கு பயணிப்பது வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும். இதற்கு முன்னர் அமெரிக்காவானது 1970களில் “மரைனர் – 10” எனும் ஆய்வு ஓடத்தை புதனுக்கு அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.இரு சாட்டிலைட்டுக்கள் புதன் கிரகத்தின் வெவ்வேறு தகவல்களை சேகரிக்க உள்ளன.
ஜப்பான் சாட்டிலைட்டானது, புதன் கோளின் காந்தப்புலம் தொடர்பான ஆய்வுகளிலும், அதன் காந்தப்புலத்தின் மீது சூரியக் காற்றின் தாக்கம் தொடர்பான ஆய்வுகளிலும் ஈடுபடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், ஜரோப்பாவின் சாட்டிலைட்டானது புதன் கோளின் தரைத்தோற்றங்களை வரைபுபடுத்துவதுடன், கோளின் உட்பகுதி தொடர்பான தரவுகள், மேற்பரப்பின் கட்டமைப்பு, ஆக்கக்கூறுகள் தொடர்பான தரவுகளையும் சேகரித்து அனுப்பும் எனக் கூறப்படுகிறது.
Discussion about this post