சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வெள்ளையன், பிரதமர் மோடியின் அறிவிப்பை ஏற்று வரும் 22 ஆம் தேதி கோயம்பேடு வணிகர் சங்கங்கள் கடையை மூட முடிவு செய்துள்ளதாக கூறினார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் கூடுவதை தவிர்த்து வரும் நிலையில், சிறு குறு வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக சென்னையில் பெரிய கடைகள், மால்கள் மூடப்பட்டுள்ள நிலையில், ரயில்கள், சில பேருந்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பொது இடங்களில் மக்களின் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. அதேபோல், வெளியூர் பயணிப்போர் எண்ணிக்கையும் வெகுவாக குறந்துள்ளதால் வணிகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் போதுமான வருமானம் இன்றி அவதிபடுவதாகவும், சிறு குறு கடைகளிலும் வியாபாரம் மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், வைரஸின் தாக்கம் விரைவில் குறையவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post