திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் கோடை வெயிலை தணிக்கும் தர்பூசணியின் விற்பனை அதிகரித்து வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்தாண்டு பருவ மழை சரிவர பெய்யாததால் தை மாசம் முடியும் முன்னரே கோடை வெயில் அதிகரிக்க தொடங்கிவிட்டது. கோடை காலம் என்றாலே வெயிலை தணிக்க மக்கள் அதிகம் விரும்புவது தர்பூசணி பழத்தை தான். இந்த பழத்தை சாப்பிட்டு முடித்தவுடன் நம்முடைய தாகம் தீர்ந்ததாக உணர்கிறோம். அப்படிப்பட்ட தர்பூசணி பழங்கள் இப்போதே விற்பனைக்கு தயாராகி படுஜோராக நடைபெற்று வருகிறது.
தர்ப்பூசணிப் பழம் உடலுக்கு மிகவும் ஆரோக்கிய மானதாகவும், குளிர்ச்சியும், புத்துணர்வு அளிக்கக் கூடியதாக இருப்பதால் மக்கள் இதனை விரும்பி வாங்கி செல்கின்றனர். குறிப்பாக மருத்துவ குணம் மிக்கதாக தர்பூசணி விளங்குவதால் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தர்பூசணியை விற்பனை செய்பவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Discussion about this post