பிரசித்திப் பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில், மாசி பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய திருவிழாவான மயானக்கொள்ளை விழா நேற்று நடைபெற்றது. பன்னிரெண்டு கரங்களுடன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அங்காளம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது காய்கள், பழவகைகள், மலர்கள், நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் ஆகியவை அம்மன் மீது வாரி இரைத்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் ஆகியோர் அம்மன், காளி, குறத்தி உள்ளிட்ட தெய்வ வேடமணிந்தும், தீச்சட்டி ஏந்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த விழாவில், தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Discussion about this post