ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று சமநிலையில் உள்ளன.
இதனைதொடர்ந்து, 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, டெஸ்ட் போட்டியின் 2வது நாளான இன்றும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
சிறப்பாக ஆடிய புஜாரா 106 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் விராட் கோலி 82 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.
Discussion about this post