மேகதாது தொடர்பான வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் மேகதாது என்னும் இடத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், தமிழக சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய கர்நாடக அரசு தரப்பு கால அவகாசம் கோரியுள்ளது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் சார்பாக வழக்கை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்ற உச்சநீதிமன்றம் மேகதாது தொடர்பான வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.
Discussion about this post